ADDED : ஏப் 30, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜனவரி 1 முதல், அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தியும், திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கு தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவர் சரவணன் அறிக்கையில் கூறியதாவது: பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. பெண் அரசுஊழியர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்கள் உயர்த்தி, தகுதிகாண் பருவப் பணிக்காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள ஆணையிட்டது வரவேற்கத்தக்கது என்றார்.

