/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெங்களூரு வியாபாரி கதி என்ன? 5 பேரிடம் போலீஸ் விசாரணை
/
பெங்களூரு வியாபாரி கதி என்ன? 5 பேரிடம் போலீஸ் விசாரணை
பெங்களூரு வியாபாரி கதி என்ன? 5 பேரிடம் போலீஸ் விசாரணை
பெங்களூரு வியாபாரி கதி என்ன? 5 பேரிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 28, 2025 12:31 AM
தேனி : கர்நாடக மாநிலம் பெங்களூரு மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் 40. இவர் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவரும் இவருடைய சகோதரி ராதா மகன் கலுவாவும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு தேனியைச் சேர்ந்த மோகன் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தார்.
ஏப்., 15ல் திலீப், கலுவா இருவரையும் தேனி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வரும்படி மோகன் கூறினார். அதன்படி பஸ் ஸ்டாண்ட் வந்த இருவரையும் டூவீலரில் பைபாஸ் பகுதிக்கு மோகன் அழைத்து சென்றார். அங்கு காரில் வந்த ஒரு கும்பல் இருவரையும் கடத்தி சென்றது. மேலும் போலி நகைகள் வழங்குவது நீங்கள் தானே எனவும் கூறி அவர்களை தாக்கியது. தொடர்ந்து தேனி அருகே தனியார் தென்னந்தோப்பில் வைத்து தென்னை மட்டையாலும் தாக்கியது.
பிறகு கலுவாவை அங்கேயே விட்டு விட்டு திலீப்பை மட்டும் அந்த கும்பல் கடத்தி சென்றது. அங்கிருந்து தப்பிய கலுவா பெங்களூரு சென்றார். திலீப்பின் மற்றொரு சகோதரி நிர்மலாவை அழைத்து வந்து தேனி போலீசில் ஏப்., 24ல் கலுவா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜவஹர் மற்றும் போலீசார் அவர்களை விசாரித்தனர். மோகன் தலைமறைவாகி விட்டார். மேலும் இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். மோகன் உள்ளிட்ட சிலரை தேடியும் வருகின்றனர். திலீப் கதி குறித்து தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.