/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எப்போது n காய்கறி மொத்த கொள்முதல் மையம் துவங்குவது n 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டிற்கு வராத நிலை
/
எப்போது n காய்கறி மொத்த கொள்முதல் மையம் துவங்குவது n 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டிற்கு வராத நிலை
எப்போது n காய்கறி மொத்த கொள்முதல் மையம் துவங்குவது n 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டிற்கு வராத நிலை
எப்போது n காய்கறி மொத்த கொள்முதல் மையம் துவங்குவது n 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டிற்கு வராத நிலை
ADDED : நவ 27, 2024 08:10 AM

கூடலுார்: தேனி மாவட்டத்தில் மொத்த காய்கறி கொள்முதல் மையம் அமைக்க தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.
தேனி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். முல்லைப் பெரியாறு அணை நீரின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து வகை காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள் மதுரை, ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அரசு சார்பில் மொத்த காய்கறி கொள்முதல் மையம் தேனி மாவட்டத்தில் துவங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வேளாண் பட்ஜெட்டில் மொத்த காய்கறி கொள்முதல் மையம் துவக்குவதற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை அதற்கான செயல்பாடுகள் எதுவும் இல்லாததால் விவசாயிகள் புலம்பியுள்ளனர்.
சதீஷ்பாபு, பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர், கூடலுார்: 2022 மார்ச்-ல் தமிழக வேளாண் பட்ஜெட்டில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி கொள்முதல் மையங்கள் துவக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது அறிவிப்போடு தற்போது வரை உள்ளது.
ஒட்டியுள்ள கேரளாவிற்கு தினந்தோறும் டன் கணக்கில் காய்கறிகள் சென்ற வண்ணம் உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து அனுப்பி வைக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
அனைத்து விவசாயிகளும் ,நுகர்வோரும் பயன்பெறும் வகையில் உடனடியாக அரசு நிதி ஒதுக்கீடு செய்து மொத்த காய்கறி கொள்முதல் மையத்தை தேனி மாவட்டத்தில் துவக்க வேண்டும், என்றார்.