/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லாரியில் வெள்ளைப் பூண்டு திருட்டு: கைது 2
/
லாரியில் வெள்ளைப் பூண்டு திருட்டு: கைது 2
ADDED : ஜன 18, 2024 06:08 AM

வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே வெள்ளைப் பூண்டு மூடைகளை ஏற்றி சென்ற லாரியில் ஏறி மூடைகளை ரோட்டில் தள்ளி திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் வலையபட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் கனகராஜ் 40. மத்திய பிரதேசத்தில் இருந்து வெள்ளைப் பூண்டு மூடைகளை ஏற்றிக்கொண்டு தேனி மாவட்டம் வடுகபட்டி நோக்கி சென்றார். வேடசந்துார் அருகே வந்தபோது லாரியை பின் தொடர்ந்து வேனில் வந்த சிலர் லாரியின் மீது ஏறி அதில் இருந்த வெள்ளைப் பூண்டு மூடைகளை ஒவ்வொன்றாக கீழே எடுத்து வீசினர்.இதை வேனில் இருந்தவர்கள் எடுத்து சென்றனர்.
பொதுமக்கள் தகவலின் படி நெடுஞ்சாலை ரோந்து எஸ்.ஐ., முகமது கான் தலைமையிலான போலீசார் வெள்ளைப் பூண்டு ஏற்றிய லாரியை நிறுத்திய நிலையில், பின்னால் வந்த வேனையும் மடக்கினர். அப்போது லாரியிலிருந்து மூடைகளை எடுத்து போட்டவர்கள் உட்பட மூன்று பேர் தப்பினர். வேடசந்துார் போலீசார் விசாரணையில் வெள்ளைப் பூண்டு மூடைகளை திருடிய கும்பல் திண்டுக்கல் இ.பி. காலனியைச் சேர்ந்த மணிகண்டன் 27, உசிலம்பட்டி கண்ணனுாரை சேர்ந்த பிரபு 34, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் வேனை பறிமுதல் செய்து தப்பிய மூவரை தேடுகின்றனர்.