/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடு கட்டும் திட்டத்தில் உத்தமபாளையம் ஒன்றியம் புறக்கணிக்கப்பட்டது ஏன்
/
வீடு கட்டும் திட்டத்தில் உத்தமபாளையம் ஒன்றியம் புறக்கணிக்கப்பட்டது ஏன்
வீடு கட்டும் திட்டத்தில் உத்தமபாளையம் ஒன்றியம் புறக்கணிக்கப்பட்டது ஏன்
வீடு கட்டும் திட்டத்தில் உத்தமபாளையம் ஒன்றியம் புறக்கணிக்கப்பட்டது ஏன்
ADDED : டிச 27, 2024 07:14 AM
உத்தமபாளையம்: 'ஊராட்சிகளில் வீடு கட்டும் திட்டத்தில் (கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம்) உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு மட்டும் குறைவான எண்ணிக்கையில் ஒதுக்கீடுகள் செய்தது ஏன்' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.தமிழக அரசு சார்பில் ஊராட்சிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரும் திட்டம்
கடந்தாண்டு அறிமுகமானது. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சிதோறும் 3 முதல் 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சின்னமனுார் ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளுக்கு 98 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கம்பம் ஒன்றியத்தில் குள்ளப்பகவுண்டன்பட்டி 4, ஆங்கூர் பாளையம் 5, சுருளிப்பட்டி 2 அனுமதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் உத்தமபாளையம் ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தலா ஒரு வீடு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதிலும் ராமசாமி நாயக்கன்பட்டி, டி. ரெங்கநாதபுரம் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடே கிடையாது.
தமிழக அரசின் வீடு கட்டும் திட்டம் ஒதுக்கீட்டில் உத்தமபாளையம் ஒன்றியம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில்,
'2023 -2024 நிதியாண்டிற்கு உத்தமபாளையம் ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் 2 ஊராட்சிகளை தவிர்த்து, மற்ற ஊராட்சிகளுக்கு தலா ஒரு வீடு தரப்பட்டது. மற்ற ஒன்றியங்களுக்கு கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த ஒதுக்கீடுகள் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்பது கலெக்டர் அலுவலகத்திற்கு தான் தெரியும். 2024 - 2025 நிதியாண்டிற்கு கூடுதல் ஒதுக்கீடுகள் கேட்டு கடிதம் எழுதி உள்ளோம்.', என்றனர்.
இந்நிலையில் 14 ஊராட்சிகள் உள்ள உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு 12 வீடுகள், கடமலைக்குண்டு ஊராட்சிக்கு மட்டும் 60 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.