/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மது பழக்கத்தை கண்டித்த மனைவி: கணவர் தற்கொலை
/
மது பழக்கத்தை கண்டித்த மனைவி: கணவர் தற்கொலை
ADDED : மே 16, 2025 04:09 AM
சின்னமனூர்: சின்னமனூர் முத்துலாபுரம் ரோடு அனுஸ்கா நகரை சேர்ந்தவர் கண்ணன் 50, இவரது மனைவி முத்துலட்சுமி 34. கண்ணன் இதய நோயால் அவஸ்தை பட்டு சமீபத்தில் பைபாஸ் ஆப்பரேஷன் செய்துள்ளார்.
வழக்கமாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர். ஆப்பரேஷன் செய்திருப்பதால் மது குடிக்க கூடாது என முத்துலட்சுமி கண்டித்தார். இதனால் எரிச்சலடைந்த கண்ணன் நேற்று முன்தினம் மாலை விஷம் குடித்து விட்டு மனைவிக்கு போன் செய்துள்ளார். பதறிய மனைவி முதுத்துலட்சுமி, கணவரை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எஸ்.ஐ இளையராஜா வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.