ADDED : ஜூலை 09, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி 45, கடந்த 7 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து அவரது தாய் அழகம்மாளுடன் வசித்து வந்தார்.
மது போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்தார். சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதித்த மனைவியை பார்க்க சென்றுள்ளார். இத்தனை ஆண்டு வராமல் இப்போது ஏன் வந்தாய் என்று மனைவி திட்டி அனுப்பி விட்டார். ஜூன் 29 ல் பெரியசாமியின் மனைவி இறந்துவிட்டார். பெரியசாமி கரட்டுப்பட்டியில் உள்ள பழனிச்சாமி தோட்டத்து கிணற்றில் குதித்தார். தீயணைப்புத் துறையினர் பெரியசாமி உடலை மீட்டனர். பெரியசாமி மகள் சாந்தி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.