ADDED : ஜூன் 10, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் 40, கூலி வேலை செய்து வரும் இவருக்கு முனியம்மாள் 30, என்ற மனைவி, லதாபாண்டி 12, ஜீவிதா 9, என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இரு நாட்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மகள்களுடன் சென்ற முனியம்மாள் வேலை முடித்த பின் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து முருகன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.