/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவி தீ வைப்பு: கணவர் இறப்பு 5 நாட்களுக்கு பிறகு
/
மனைவி தீ வைப்பு: கணவர் இறப்பு 5 நாட்களுக்கு பிறகு
ADDED : ஜன 06, 2025 03:31 AM

கூடலுார்: தேனி மாவட்டம் கூடலுாரில் மனைவியால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கணவர் மதுரை தனியார் மருத்துவமனையில் 5 நாட்களுக்கு பிறகு இறந்தார்.
கூடலுார் கள்ளர் வடக்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் பொன்விஜய் 48. தி.மு.க., தேனி தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவராக இருந்தார்.
இவரது மனைவி இலக்கியா 37. குடும்பத்தகராறில் 2024 டிச.,31ல் காலை 9.30 மணிக்கு வீட்டில் துாங்கிய கணவரின் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு மனைவி வெளியேறி விட்டார்.
முகம், மார்பு, கைகள், கால்கள் எரிந்து ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் பொன்விஜய் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொன்விஜய்யின் தாய் கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் இலக்கியாவை கூடலுார் வடக்கு போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 8:00 மணிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் பொன்விஜய் இறந்தார். பொன்விஜய் மதுரை மாநகராட்சி தி.மு.க., மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தின் சகோதரர்.