ADDED : டிச 30, 2024 06:36 AM
கடமலைக்குண்டு : கண்டமனுார் அருகே துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் தினகரன் 23. இவரது மனைவி பிரியா 23. தனக்கு அலைபேசியில் வரும் அழைப்பை வீட்டிற்கு வெளியில் சென்று பேசுவதை கணவர் வழக்கமாக செய்து வந்தார்.
இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த, மனைவி அடிக்கடி தகராறு செய்தார். டிச.28ல் வேலைக்கு கணவர் புறப்பட்டார். அப்போது அலைபேசியில் அழைப்பு வந்தது.
கணவர், வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே சென்று பேசினார். இதை பார்த்த மனைவி பிரியா, வேறு பெண்ணுடன் பேசுகிறாயா என்று தரம் தாழ்ந்து கணவரை பேசினார். அலைபேசியை பறித்து, கீழே வீசினார்.
பின், கீழே கிடந்த போனை குனிந்து எடுத்த கணவரை, காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி பிரியா பல இடங்களில் குத்தி காயங்கள் ஏற்படுத்தினார்.
இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர். மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கணவர் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.