ADDED : ஜூன் 21, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 43, தேனியில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பசுபதி 34, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இரு நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு, இரவில் வீட்டை விட்டு மனைவி வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மனைவியை தேடிய போது அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் ரஞ்சித்குமார் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.