/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் பெருமாள் கோயில் அருகே வன விலங்குகள் நடமாட்டம் - விவசாயிகள் அச்சம்

ADDED : ஏப் 18, 2025 06:52 AM
கூடலுார்: கூடலுார் கூத்த பெருமாள் கோயில் அருகே கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கூத்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இதனை ஒட்டி சுரங்கனாறு, கழுதை மேடு, கல்லுடைச்சான் பாறை, ஏகலுாத்து உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. தினந்தோறும் விவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் அதிகம் வருகின்றனர். மேலும் பெருமாள் கோயில் உள்ளதால் அவ்வப்போது பக்தர்களும் இப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
காட்டுப்பன்றி, மான், மயில் நடமாட்டம் இப்பகுதியில் அதிகம். இது தவிர சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் சிறுத்தையின் கால் தடங்களை விவசாயிகள் பார்த்துள்ளனர். அதிகமான கால் தடங்கள் இருந்ததால் குட்டிகளுடன் அடிக்கடி உலா வருவதாக விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் சமீபத்தில் இப்பகுதியில் கரடி தாக்கி விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்தார். வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் தடுக்க சோலார் மின் வேலி அமைத்து விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.