/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்
/
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்
ADDED : டிச 15, 2025 06:13 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகாப் பகுதிகளில் கரும்பு, மக்காச்சோளம் உட்பட பல்வேறு பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தாலுகாவில் கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, பெரியகுளம், லட்சுமிபுரம், சருத்துப்பட்டி, எ.புதுப்பட்டி, ஜல்லிபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நுாற்றுக் கணக்கான ஏக்கரில் ஆலைக் கரும்பு, மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விளை நிலங்களில் காட்டுப் பன்றிகள் சென்று கரும்பையும், மக்காச்சோளத்தை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். வனத்துறை நிர்வாகம் காட்டுப் பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

