/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோயர்கேம்ப்பில் காட்டுயானை; கூடலூர் விவசாயிகள் அச்சம்
/
லோயர்கேம்ப்பில் காட்டுயானை; கூடலூர் விவசாயிகள் அச்சம்
லோயர்கேம்ப்பில் காட்டுயானை; கூடலூர் விவசாயிகள் அச்சம்
லோயர்கேம்ப்பில் காட்டுயானை; கூடலூர் விவசாயிகள் அச்சம்
ADDED : ஜன 18, 2024 06:16 AM
கூடலுார் : கூடலுார் வனப்பகுதியில் இருந்து லோயர்கேம்ப் எல்லை வரை வந்து செல்லும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் அருகே லோயர்கேம்பை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது.
மங்கலதேவி கண்ணகி கோயில் அடிவாரப் பகுதியில் உள்ள பளியன்குடியில் இருந்து குமுளி மலைப்பாதையை ஒட்டியுள்ள லோயர்கேம்ப் வரை காட்டு யானை கடந்த ஒரு மாதமாக வந்து திரும்பி செல்கின்றன.
வனப்பகுதியை ஒட்டி நூற்றுக்கணக்கான ஏக்கரில் புளியமரம், தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிகம் உள்ளது. எல்லைப் பகுதியில் உலா வந்த காட்டு யானை கடந்த இரண்டு தினங்களாக விளைநிலத்திற்குள் புகுந்து லோயர்கேம்ப் வரை வந்து திரும்புகிறது.
வரும் வழியில் விவசாயிகளை விரட்டும் சம்பவமும் நடந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.