ADDED : பிப் 04, 2024 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் பல்வேறு குழுக்களாக 12 காட்டுயானைகள் முகாமிட்டதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
அங்கு கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் அதிகம் நடமாடுகின்றன. கடந்த மூன்று நாட்களாக பிரபல படையப்பா ஆண் காட்டு யானை உள்பட 12 காட்டு யானைகள் முகாமிட்டன.
இதனிடையே நேற்று காலை 9:30 மணிக்கு இரண்டு யானைகள் யாரும் எதிர்பாராத வகையில் குடியிருப்புகளின் அருகில் உள்ள ரோட்டில் சென்றன. அப்போது அந்த வழியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. அவை பகல் 12:00 மணி வரை 14ம் எண் தேயிலை தோட்டத்தினுள் இரை தேடி திரிந்தன. அப்பகுதில் 12 யானைகள் முகாமிட்டதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.