/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகள் நடமாட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
காட்டு யானைகள் நடமாட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காட்டு யானைகள் நடமாட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காட்டு யானைகள் நடமாட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : அக் 12, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு, : மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட், பாக்டரி டிவிஷனில் நேற்று காலை நடமாடிய காட்டு யானை கூட்டத்தால், தொழிலாளர்கள், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அப்பகுதியில் நேற்று காலை ஒரு ஆண் யானை, குட்டிகள் உள்பட ஆறு காட்டு யானைகளை கொண்ட கூட்டம் காடுகளை விட்டு வெளியேறி ரோடு, புல்மேடு ஆகியவற்றில் நடமாடின. அதனால் பீதி அடைந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டதுடன் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவை காட்டிற்குள் சென்ற பிறகு இயல்பு நிலை திரும்பியது. அதே பகுதியில் காட்டினுள் நேற்று பகலிலும் யானைகள் முகாமிட்டதால் மக்கள் அச்சத்துடன் நடமாடினர்.