/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோயர்கேம்பில் மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
/
லோயர்கேம்பில் மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
லோயர்கேம்பில் மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
லோயர்கேம்பில் மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
ADDED : ஜன 26, 2025 05:54 AM

கூடலுார்: லோயர்கேம்ப் தனியார் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான மா மரங்களை சேதப்படுத்தியது.
கூடலுார், லோயர்கேம்ப் வனப்பகுதியை ஒட்டி தனியார் விளைநிலங்கள் அதிகம் உள்ளது. மா, தென்னை, வாழை, மொச்சை, அவரை, தட்டை உள்ளிட்ட சாகுபடி அதிகம் செய்யப்பட்டுள்ளது.
லோயர்கேம்ப் பென்னி குவிக் மணிமண்டபத்திற்கு பின்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து இரவில் வந்த காட்டு யானைகள் சுரேஷ் என்பவரது மாந்தோப்பிற்குள் நுழைந்தது.
ஏராளமான மரங்களை உடைத்து சேதப்படுத்தியது.
கற்கள் மற்றும் கம்பி வலையுடன் அமைக்கப்பட்டிருந்த வேலியையும் சேதப்படுத்தியது.
இதனால் ரூ.பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,
அடிக்கடி யானைகள் விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் வனத்துறையினர் அகழி அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.