/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கார் கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானைகள்
/
கார் கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானைகள்
ADDED : ஜூலை 28, 2025 05:28 AM

மூணாறு : குட்டி இறந்த சோகத்தில் நடமாடிய காட்டு யானைகள் வீட்டின் அருகே நிறுத்தி இருந்த காரின் பின்புற கண்ணாடியை  சேதப்படுத்தின.
மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் ஆர் அன்ட் டீ டிவிஷன் பகுதியில் தாய் உட்பட 2 பெண் காட்டு யானைகளுடன் சுற்றித் திரிந்த மூன்று மாதங்களே வளர்ச்சியுள்ள யானைக்குட்டி உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தது.
அதன் அருகில் காவல் காத்து நின்ற இரண்டு பெண் யானைகளும் சோகத்துடன் காட்டிற்குள் சென்றன. அவை நேற்று முன்தினம் இரவு மாட்டு பட்டி எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதிக்கு சென்றன. அங்கு தோட்ட அதிகாரியான சதீஷ் தனது வீட்டின் அருகில் உள்ள ஷெட்டில் நிறுத்தி இருந்த காரின் பின்புற கண்ணாடியை  சேதப்படுத்தின.
பிரேத பரிசோதனை இறந்த யானை குட்டியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தேக்கடியைச் சேர்ந்த வனத்துறை கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் அனுராஜ் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது.
முக்கிய உள் உறுப்புகள் செயலிழந்து யானை குட்டி இறந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

