/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரள மாநிலத்தில் வன உயிரின வார விழா: தேக்கடியில் துவக்கம்
/
கேரள மாநிலத்தில் வன உயிரின வார விழா: தேக்கடியில் துவக்கம்
கேரள மாநிலத்தில் வன உயிரின வார விழா: தேக்கடியில் துவக்கம்
கேரள மாநிலத்தில் வன உயிரின வார விழா: தேக்கடியில் துவக்கம்
ADDED : அக் 03, 2024 06:25 AM

மூணாறு: தேக்கடியில் மாநில அளவிலான வன உயிரின வார விழாவை வனத்துறை அமைச்சர் சசீந்திரன் 'ஆன் லைன்' வாயிலாக துவக்கி வைத்தார்.
கேரளாவின் வன உயிரின வார விழா நேற்று துவங்கி அக்.8 வரை நடக்கிறது. அதனை தேக்கடியில் முதன் முதலாக வனத்துறை அமைச்சர் சசீந்திரன் 'ஆன்லைன்' வாயிலாக துவக்கி வைத்தார். வன உயிரின தலைமை பாதுகாவலர் பிரமோத்கிருஷ்ணன், முதன்மை வனத்துறை அதிகாரி கங்காசிங், குமுளி ஊராட்சி தலைவர் ரஜனிபிஜூ உள்பட பலர் பங்கேற்றனர். வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு அக்.8 வரை பல்வேறு கலைப் போட்டிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றிற்கும், விழா நிறைவு நாளில் பள்ளிக் கல்லுாரி, தனியார் கிளப் ஆகியோர் சார்பில் பொது விழிப்புணர்வு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இதுதவிர அரசின் நுாறு நாட்கள் திட்டத்தின்படி வனத்துறை சார்பில் ஆர்.கே.வி. ஒய் திட்டத்தில் உட்படுத்தி மனித, வனவிலங்கு மோதலை தவிர்க்கவும், பயிர்களை பாதுகாக்கவும் பெரியாறு புலிகள் காப்பகத்தின் கிழக்கு பிரிவில் செயல்படுத்தும் திட்டங்களின் துவக்க விழா வல்லக்கடவில் நடந்தது. அதேபோல் இடுக்கி வளர்ச்சி தொகுப்பில் உட்படுத்தி இடுக்கி வன உயிரின சரணாலயத்தில் இடுக்கி நீர் தேக்கத்தில் எக்கோ டூரிசம் சார்பில் 18, 10, இருக்கைகள் கொண்ட படகுகள் வாங்கும் திட் டிக்கட் கவுண்டர் சீரமைப்பு உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.