/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீதோஷ்ண நிலையை தெரிவிக்கும் செயலி பயன்பாட்டிற்கு வருமா; திராட்சை விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
சீதோஷ்ண நிலையை தெரிவிக்கும் செயலி பயன்பாட்டிற்கு வருமா; திராட்சை விவசாயிகள் எதிர்பார்ப்பு
சீதோஷ்ண நிலையை தெரிவிக்கும் செயலி பயன்பாட்டிற்கு வருமா; திராட்சை விவசாயிகள் எதிர்பார்ப்பு
சீதோஷ்ண நிலையை தெரிவிக்கும் செயலி பயன்பாட்டிற்கு வருமா; திராட்சை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 31, 2025 12:24 AM
கம்பம்; சீதோஷ்ண நிலை மாற்றத்தை முன் கூட்டியே தெரிவிக்கும் பிரத்யேக செயலி வடிவமைத்தப்பட்டுள்ளது. அது பயன்பாட்டிற்கு வருமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் திராட்சை சாகுபடி 10 ஆயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது. கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சையும், ஓடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது. திராட்சையில் சாம்பல் நோய், மழை மற்றும் பனி காலங்களில் திராட்சை உதிர்வது, உடைந்து போன்ற பிரச்னைகள் உள்ளது. திராட்சை விவசாயிகளுக்கு சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே எச்சரித்து அதற்கு என்ன மருந்து தெளிக்கலாம், கவாத்து அடிப்பதற்கு முன்கூட்டி என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை திராட்சை விவசாயிகளுக்கு தெரிவிக்க மொபைல்ஆப் புனே தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையம் வடிவமைத்துள்ளது.
திராட்சை விவசாயி தனது ஸ்மார்ட் போனில் இச்செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், அவர் தனது தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் சாகுபடி தகவல்கள் பதிவாகும். அதில் தண்ணீர் எவ்வளவு பாய்ச்ச வேண்டும், என்ன பூச்சி மருந்து, எந்த அளவு தெளிக்க வேண்டும், என்ன நோய் தாக்கும் போன்ற விபரங்கள் செயலியில் பதிவாகும்.
இந்த செயலி தொடர்பாக ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் 2 ஆண்டுகளுக்கு முன்பே செயலி பற்றி தெரிவித்தது. ஆனால் இதுவரை செயலி பயன்பாட்டிற்கு வரவில்லை. அந்த செயலி பயன்பாட்டிற்கு வந்தால் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். எனவே புனே ஆராய்ச்சி நிலையத்துடன் தொடர்பு கொண்டு, அந்த செயலியை கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை விவசாயிகள் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.