/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 'கால்போஸ்கோபி' கருவி வழங்கப்படுமா....: கர்ப்பவாய் புற்று நோய் அறிந்து சிகிச்சை அளிக்க உதவும்

ADDED : ஜூலை 19, 2025 12:36 AM

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் கண்டறிதலில் தீவிரம் காட்டப்படுகிறது. 10 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் கர்ப்ப வாய் புற்றுநோய் கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும், கடந்த சில ஆண்டுகளில் கர்ப்ப வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற்று நோய் தடுப்பு திட்டம் அறிமுகம் செய்து பல்வேறு புற்றுநோய்கள் கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.என்.சி.டி ( தொற்றா நோய் பிரிவு) நர்சுகள் தினமும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருபவர்களுக்கு ரத்த அழுத்தம் , சர்க்கரை பரிசோதனை மற்றும் பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
இப் பரிசோதனையில் பெண்களின் கர்ப்பவாய் புற்றுநோய் எந்த அளவிற்கு உள்ளது, எந்தெந்த பகுதியில் பரவி உள்ளது, கர்ப்பவாய் புற்றுநோய் தானா என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ள வீடியோ 'கால்போஸ்கோபி' என்ற மானிட்டருடன் கூடிய கருவி உள்ளது. இந்த கருவி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அக்கருவியை வழங்கவும், அதனை இயக்கும் பயிற்சியை நர்சுகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாரித்த போது, கர்ப்ப வாய் மீது மருந்து தடவி, அதன் நிறம் மாறுவதை வைத்து, தற்போது கர்ப்ப வாய் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இதற்கடுத்து தான் 'கால்போஸ்கோபி' பயன்படுத்துவது.
மூன்றாவதாக பயாப்சி எடுப்பது. குறிப்பாக கால்போஸ்கோபியை டி.ஜி.ஒ. படித்த டாக்டர்கள் தான் கையாள முடியும். நர்சுகளுக்கு பயிற்சி இல்லை. இப்போதைக்கு பின்பற்றப்படும் முறை நன்றாக உள்ளது. வரும் காலங்களில் என்.சி.டி. பிரிவு நர்சுகளுக்கு பயிற்சியளித்தால் கால்போஸ்கோபி பயன்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் நோய் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம்,' என்கின்றனர்.