/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் வழுக்கி விழும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதை அமல்படுத்தப்படுமா

ADDED : ஜன 08, 2024 06:22 AM

தேனி : தேனி மதுரை ரோட்டில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அருகே ரோடு சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாக உள்ளதால், டூவீலரில் வருவோர் வழுக்கி விழுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மாற்றுப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் மதுரை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.92.02 கோடி மதிப்பில் மேம்பால பணிகள் நடக்கின்றன. மேம்பால பணிகள் துவங்கி 2 ஆண்டுகள் முழுமை அடைந்த போதிலும் இன்னும் துாண்கள் அமைக்கும் பணியே முழுமையாக நிறைவு பெற வில்லை. நெடுஞ்சாலைத்துறையினரோ நிதானமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் இருந்து தனியார் மில் வரை மழை பெய்ததால் ரோடு சேறும் சகதியுமாக, குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதில் டூவீலரில் செல்வோர் வழுக்கி விழுவது தொடர்கிறது. மழை இல்லாத நேரத்தில் அதிக அளவில் புழுதி பறக்கிறது. இதனால் இப்பகுதியில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மேம்பால பணிக்காக மாற்றுப்பாதை தேர்வு செய்யும் பணியை 6 மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கினர். அப்பணிக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இதனால் மேம்பால பணி நடக்கும் பகுதியில் பயணிப்போர் பயத்துடனேயே பயணிக்கும் நிலை உள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் மாற்றுபாதையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.