/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடுத்த கல்வியாண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுமா இடம் தேர்வு செய்ய முடியாமல் தவிப்பு

ADDED : அக் 27, 2025 03:33 AM
தேனி: மாவட்டத்தில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் அடுத்தக் கல்வி ஆண்டிலாவது கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பாட்டிற்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேனி, தஞ்சை மாவட்டங்களில் கேந்திரிய வித்தியாலயா பள்ளி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. தேனியில் நகராட்சி துவக்கப் பள்ளியில் இந்தக் கல்வி ஆண்டில் வகுப்புகள் துவங்க நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் கே.வி., பள்ளி நிர்வாகம் போதிய வசதிகள் இல்லை என காரணம் கூறியதால் வகுப்புகள் இந்தாண்டு துவங்கவில்லை. மேலும் நிரந்தர இடம் தேர்வு செய்து கட்டுமானங்கள் துவங்குவதற்கான பணிகள் 5 மாதங்களுக்கு முன் துவங்கின.
கே.வி., பள்ளிக்காக பெரியகுளம், தேனி ஆகிய தாலுகாக்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதனை கே.வி., பள்ளி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.
ஆனால், எந்த இடத்தில் பள்ளி அமைகிறது உள்ளிட்ட எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனால் அடுத்த கல்வியாண்டிலாவது கே.வி., பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.