/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிக பரப்பளவுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் இரண்டாக பிரிக்கப்படுமா: பணிச்சுமை, போலீஸ் பற்றாக்குறையால் திண்டாட்டம்
/
அதிக பரப்பளவுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் இரண்டாக பிரிக்கப்படுமா: பணிச்சுமை, போலீஸ் பற்றாக்குறையால் திண்டாட்டம்
அதிக பரப்பளவுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் இரண்டாக பிரிக்கப்படுமா: பணிச்சுமை, போலீஸ் பற்றாக்குறையால் திண்டாட்டம்
அதிக பரப்பளவுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் இரண்டாக பிரிக்கப்படுமா: பணிச்சுமை, போலீஸ் பற்றாக்குறையால் திண்டாட்டம்
ADDED : டிச 31, 2024 06:49 AM
மாவட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட 37 ஸ்டேஷன்கள் இயங்குகின்றன. பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் வீரபாண்டி ஸ்டேஷன் இயங்குகிறது.பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் எல்லை 24 கி.மீ., துார பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது.
இதன் கட்டுப்பாட்டில் பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம் பேரூராட்சிகளில் உள்ள தலா 15 வார்டுகள், மேற்குப்புறம் கோடாங்கிபட்டி ஊராட்சியில் திருச்செந்துார், தோப்புப்பட்டி உட்பட5 உட்கடை கிராமங்கள் உள்ளன. டொம்புச்சேரி ஊராட்சியில் மூன்று உட்கடை கிராமங்கள் உள்ளன. கிழக்குப்புறத்தில் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் அரண்மனைப்புதுாரில் இருந்து சங்கக்கோணாம்பட்டி,நாகலாபுரம், சத்திரபட்டி வரை 13 உட்கடை கிராமங்கள் அமைந்துள்ளன. போலீசார் மேற்குப் பகுதியில் ஒரு குற்றச்சம்பவத்தை விசாரித்தால், கிழக்குப்பகுதியில் உள்ள 13 உட்கடை கிராமப் பகுதிகளில் என்ன அசம்பாவிதம் நடந்தாலும், அங்கு செல்வதற்குள் சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகின்றன.
கிழக்குப் பகுதிக்கு சென்றால் மேற்கு பகுதி கிராமங்களுக்கு வருவதற்குள் குற்றச்சம்பவங்கள் முடிகின்றன. அதிக துாரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீசார் சிரமப்படுகின்றனர். இதில் போலீசார் பற்றாக்குறையும் உள்ளது. சர்க்கிள் ஸ்டேஷனாக உள்ள வீரபாண்டியில் வீரபாண்டிபேரூராட்சி, உப்பார்பட்டி, கூழையனுார், உப்புக்கோட்டை, கோட்டூர், பூமலைக்குண்டு, தாடிச்சேரி,தப்புக்குண்டு, ஜங்கால்பட்டி உட்பட 8 ஊராட்சிகளில் 31 கிராமங்கள் உள்ளன. பழனிசெட்டிபட்டி எல்லையில் 85,000 பேர் வசிக்கின்றனர். வீரபாண்டியில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தேனி சப் டிவிஷனில் இந்த போலீஸ் ஸ்டேஷன்களில்தான் குற்றச்சம்பங்களும்,விபத்துகளும் அதிகமாக நடக்கின்றன. அதற்கு காரணம் தேசிய நெடுஞ்சாலை, சபரிமலை சீசன் காலங்களில் போக்குவரத்து அதிகரிக்கிறது. இதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். கொடுவிலார்பட்டியில் ஒரு புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைத்தால் சிரமங்கள் குறையும். இதே நிலை சின்னமனுார், தேவதானபட்டி போலீஸ் ஸ்டேஷன்களிலும் உள்ளன.