/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முட்புதர்கள் சூழ்ந்த 18ம் கால்வாய் நீர்திறப்புக்கு முன் சீரமைக்கப்படுமா
/
முட்புதர்கள் சூழ்ந்த 18ம் கால்வாய் நீர்திறப்புக்கு முன் சீரமைக்கப்படுமா
முட்புதர்கள் சூழ்ந்த 18ம் கால்வாய் நீர்திறப்புக்கு முன் சீரமைக்கப்படுமா
முட்புதர்கள் சூழ்ந்த 18ம் கால்வாய் நீர்திறப்புக்கு முன் சீரமைக்கப்படுமா
ADDED : டிச 21, 2024 08:07 AM

கூடலுார், : முட்புதர்கள் சூழ்ந்த 18ம் கால்வாயை நீர்திறப்புக்கு முன் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியில் இருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை 47 கி.மீ., தூர 18ம் கால்வாய் உள்ளது. இத் திட்டத்தின் மூலம் 55 கண்மாயிகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் பெருகுவதுடன் நேரடி பாசனமும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த ஆண்டு தாமதமாக டிச. 19ல் திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் நீர்மட்டம் குறைவு காரணமாக நீர் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் நீர்மட்டம் 130 அடியை எட்டிய நிலையில் கால்வாயில் தண்ணீர் திறக்கலாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். அரசு உத்தரவு வந்த பின் தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் கால்வாய் பராமரிப்பின்றி முப்புதர்களாக உள்ளது. கரைப்பகுதியில் பல இடங்களில்ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் கரைப்பகுதி சேதமடைந்துள்ளது. தண்ணீர் திறக்கும்போது முட்புதர்கள் சூழ்ந்த கால்வாயில் தண்ணீர் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் நீர்திறப்புக்கு முன் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.