/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிகரிக்கும் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா
/
அதிகரிக்கும் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா
அதிகரிக்கும் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா
அதிகரிக்கும் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா
ADDED : டிச 15, 2025 06:13 AM
தேனி: பழனிசெட்டிபட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், அகற்றவும் பேரூராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது.
பழனிசெட்டிபட்டி தேனி நகர் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் பல்வேறு புதிய குடியிருப்பு பகுதிகள், விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்துள்ளன.
தேனி நகரில் இருந்து போடி, கம்பம் செல்லும் வாகனங்கள், மறு மார்க்கத்தில் வரும் வாகனங்கள் பழனிசெட்டிபட்டி வழியாக பயணிக்கின்றன.
கொட்டக்குடி ஆற்றுப் பாலத்தில் இருந்து போடி விலக்கு வரை ரோட்டின் இரு புறமும் ஆக்கிரமித்து இறைச்சி விற்பனை கடைகள், பழக்கடைகள், டீ கடைகள், பழைய இரும்பு கடை, ஓட்டல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகளுக்கு வருவோர் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் ரோட்டின் ஒரு பகுதி மறைக்கப்படுகிறது.
தொடர்ந்து வரும் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. ஆனால், இதனை பேரூராட்சி நிர்வாகமோ, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரோ கண்டு கொள்வது இல்லை.
இதனால் இப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
ரோட்டின் ஓரங்களில் இடையூறு ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

