/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பங்குனி உத்திரதேர் செல்லும் ரோடு 4 நாட்களில் தயாராகுமா
/
பங்குனி உத்திரதேர் செல்லும் ரோடு 4 நாட்களில் தயாராகுமா
பங்குனி உத்திரதேர் செல்லும் ரோடு 4 நாட்களில் தயாராகுமா
பங்குனி உத்திரதேர் செல்லும் ரோடு 4 நாட்களில் தயாராகுமா
ADDED : ஏப் 06, 2025 08:05 AM

பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரதேர் செல்லும் ரோட்டில் சிறுபாலம் பணி நடைபெறுவதால் தேர் செல்வதற்கு பாலம் தயார்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஏப்.10ல் நடக்கிறது.
வீச்சு கருப்பணசுவாமி கோயில் எதிர்ப்புறம் தேர்நிலையிலிருந்து, வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ரோடு வழியாக தேர் சென்று, திருவள்ளுவர் சிலை, கீழரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக தேர்நிலையை வந்து அடையும். தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் திரள்வார்கள்.
தேர் செல்லும் ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் சிறுபாலம் அமைக்க சமீபத்தில் கான்கீரிட் பணி முடிந்துள்ளது.
தேர் திருவிழாவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர் மற்றும் அதனை இழுத்துச் செல்லும் பக்தர்கள் என மொத்தம் 40 டன் எடையை கொண்டிருக்கும்.
எனவே, பாலத்தை கடந்து தேர் செல்லுமா என்ற அச்சம் பக்தர்களிடம் எழுந்துள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சரவணன் கூறுகையில், 'சிறுபாலம் வேலை ஏப்.9ல் முடிந்து விடும். தேர் சிறுபாலம் வழியாக தாராளமாக செல்லலாம்.
சிறுபாலத்திற்கு கீழ் வலுவான தாங்குதானம் அமைக்கப்பட்டுள்ளது. 35 டன் எடையிாலன 'டாரஸ் லாரி' தற்போது இப்பகுதியில் சென்று வருகிறது. தேர்த்திருவிழா முடிந்தவுடன் வடிகால் கட்டுமான பணி, சாலை மேம்பாட்டு பணிகள் நடக்கும்,' என்றார்.-