ADDED : டிச 13, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு பகுதியில் மூன்று குட்டிகளுடன் புலி நடமாடியதாக பொய்யான தகவல் பரவியது.
மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் பகுதியில் இரவில் ரோட்டில் மூன்று குட்டிகளுடன் புலி நடமாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. வனத்துறை அதிகாரி பிஜூ விசாரணை நடத்தினார். சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் புலிகள் நடமாடிய வீடியோ என தெரியவந்தது. அதனால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

