/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் மருத்துவமனையில் 'கிரிட்டிக்கல் கேர் பிளாக்' அமையுமா
/
கம்பம் மருத்துவமனையில் 'கிரிட்டிக்கல் கேர் பிளாக்' அமையுமா
கம்பம் மருத்துவமனையில் 'கிரிட்டிக்கல் கேர் பிளாக்' அமையுமா
கம்பம் மருத்துவமனையில் 'கிரிட்டிக்கல் கேர் பிளாக்' அமையுமா
ADDED : டிச 07, 2024 08:19 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடியில் 'கிரிட்டிக்கல் கேர் பிளாக்' அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.
கம்பம் அரசு மருத்துவமனையில் அதிகளவில் வெளி மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். 200 க்கும் மேற்பட்ட படுக்கைகள், மூன்று ஆப்பரேஷன் தியேட்டர்கள் உள்ளன. 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் உள்ளது.
மாதம் 200 பிரசவங்கள் நடைபெறுகிறது. பிரசவ வார்டை நவீனப்படுத்த ரூ.10 கோடியில் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்டது. அதன் கட்டுமான பணிகள் ஒராண்டிற்கும் மேலாக இழுபறியில் உள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை, ஆப்பரேஷன் அடிப்படையில் கிரிட்டிக்கல் கேர் பிளாக் கட்ட ரூ.20 கோடி ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது. பி.எம். கேர் நிதியிலிருந்து இந்த தொகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆறு மாடிகளை கொண்ட கட்டடத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அல்லது சிடி ஸ்கேன், தலைக்காய சிகிச்சை பிரிவு , ஸ்ட்ரோக் தொடர்பான சிகிச்சை பிரிவு, ஐ.சி.யூ. நவீன லேப் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை. இணை இயக்குநர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பி.எம். கேர் நிதியிலிருந்து நிதியை பெற முயற்சிக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.