/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு 'வயர்லெஸ்' குறித்து செயல் விளக்க பயிற்சி
/
மாணவர்களுக்கு 'வயர்லெஸ்' குறித்து செயல் விளக்க பயிற்சி
மாணவர்களுக்கு 'வயர்லெஸ்' குறித்து செயல் விளக்க பயிற்சி
மாணவர்களுக்கு 'வயர்லெஸ்' குறித்து செயல் விளக்க பயிற்சி
ADDED : அக் 18, 2025 04:35 AM

தேனி: தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள தேசிய சாரண - சாரணியர் படை சார்பில், வயர்லெஸ் வாக்கி டாக்கி பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அந்தந்த பள்ளிகளில் நடந்தது.
நாடார் சரஸ்வதி பள்ளியில் பயிற்சியாளர் முத்து மாணவர்களை, பழனியப்பா பள்ளி, முத்துதேவன்பட்டி மெட்ரிக் பள்ளி மாணவர்களுடன் வயர்லெஸ் அலைவரிசை மூலம் இணைத்து பேச வைத்தார்.
வயர்லெஸ் கருவிகளின் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் தலைமை வகித்தார். சாரண ஆசிரியர்கள் தன்ராஜ், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். 15 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இதுபோல் மூன்று பள்ளிகளிலும் பயிற்சி வழங்கினார்.