/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு வசதி இன்றி மலைக் கிராம மக்கள் தவிப்பு; நோயாளிகளை டோலியில் சுமந்து வரும் அவலம்

ADDED : செப் 25, 2024 05:12 AM
போடி, : அகமலையில் இருந்து போடிக்கு ரோடு வசதி இல்லாததால் மருத்துவ வசதி பெற நோயாளிகளை டோலி மூலம் கட்டி தூக்கி வர வேண்டிய நிலையில் மலைக் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகமலை ஊராட்சி மலைக் கிராமம். இப்பகுதியில் அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, மரியூர் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் அடங்கி உள்ளன. போடியில் இருந்து வேட்டை கருப்பசாமி கோயில் ஆற்றுப் பாதையின் வழியாக புலிச்சிமான்துறை வழியாக உலக்குருட்டி, ஊரடி, ஊத்துக்காடு, சின்னாறு, அகமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு செல்லலாம். இப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இலவம், எலுமிச்சை, காப்பி, மிளகு, வாழை, சப்போட்டா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். விளை பொருட்களை போடிக்கு கொண்டு வர ரோடு வசதி இல்லை. போடியில் இருந்து புலிச்சிமான்துறை வரை மட்டுமே ரோடு வசதி உள்ளது. அங்கு இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் குதிரை, கழுதைகள், தலைச் சுமையாக விளை பொருட்களை கொண்டு வர வேண்டியது உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மலைக் கிராம மக்கள் நோய் வாய்ப்பட்டால் அங்குள்ள நபர்கள் மூலம் மூலிகை வைத்தியம் பார்க்கின்றனர்.
முடியாத நிலையில் நோயாளிகளை டோலி மூலம் கட்டி தூக்கி வர வேண்டியது உள்ளது. விவசாயிகளின் பயன் பெறும் வகையில் போடி - அகமலைக்கு ரோடு வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.