/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆரம்ப சுகாதார நிலையம் இன்றி சிகிச்சைக்கு 3 கி.மீ., செல்லும் நிலை
/
ஆரம்ப சுகாதார நிலையம் இன்றி சிகிச்சைக்கு 3 கி.மீ., செல்லும் நிலை
ஆரம்ப சுகாதார நிலையம் இன்றி சிகிச்சைக்கு 3 கி.மீ., செல்லும் நிலை
ஆரம்ப சுகாதார நிலையம் இன்றி சிகிச்சைக்கு 3 கி.மீ., செல்லும் நிலை
ADDED : ஜூன் 29, 2025 12:11 AM
தேனி: தேனி நகராட்சி கருவேல்நாயக்கன்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் சிகிச்சைக்காக 3 கி.மீ.,துாரமுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை நீடிக்கிறது.தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
வார்டுகள் பெரும்பாலும் நேரு சிலை முதல் பொம்மையகவுண்டன்பட்டி வரையில் உள்ளன. மதுரை ரோட்டில் 30 முதல் 33வது வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 4 உள்ளன. இந்த 4 சுகாதார நிலையங்களும் பெரியகுளம் ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே, ஒண்டி வீரன் காலனியில் அமைந்துள்ளன.
ஆனால் நகராட்சிக்குட்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியில் 500 குடும்பங்கள் உள்ளன. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட பல அரசுத்துறை அலுவலகங்களும் இங்கு உள்ளன.
ஆனால் முதலுதவி, காய்ச்சல், தலைவலி என்றால் கூட சிகிக்சை பெற வேண்டும் என்றால் நகர்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அல்லது க.விலக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.