/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிணற்றின் அருகே தடுப்பு சுவரின்றி விபத்து அபாயம்
/
கிணற்றின் அருகே தடுப்பு சுவரின்றி விபத்து அபாயம்
ADDED : செப் 30, 2024 05:17 AM

தேவாரம்: போடி அருகே திம்மிநாயக்கன்பட்டியில் இருந்து தேவாரம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் கிணறு அருகே தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திம்மநாயக்கன்பட்டி -தேவாரம் செல்லும் ரோட்டில் திம்மிநாயக்கன்பட்டி, எரணம்பட்டி, கோணாம்பட்டி, குட்டசெட்டிபட்டி, தம்மிநாயக்கன்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் வழியாக தேவாரம் செல்லும் ரோடு அமைந்துள்ளது. திம்மிநாயக்கன் பட்டி வழியாக எரணம்பட்டி செல்லும் ரோட்டின் அருகே கிணறு அமைந்து உள்ளது. இக்கிணறு அருகே ரோட்டின் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக அமைந்து உள்ளது. தெரு விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்த இரவு நேரங்களில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. அப்போது கிணறு இருக்கும் இடம் தெரியாத நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கிணறு அமைந்துள்ள ரோட்டோர பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. விபத்து ஏற்படும் முன் கிணறை ஒட்டி உள்ள ரோட்டோர பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்திட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.