/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பஸ் டெப்போ இன்றி 20 கிராம மக்கள் அவதி ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இரவில் பஸ்கள் நிறுத்த வலியுறுத்தல்
/
அரசு பஸ் டெப்போ இன்றி 20 கிராம மக்கள் அவதி ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இரவில் பஸ்கள் நிறுத்த வலியுறுத்தல்
அரசு பஸ் டெப்போ இன்றி 20 கிராம மக்கள் அவதி ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இரவில் பஸ்கள் நிறுத்த வலியுறுத்தல்
அரசு பஸ் டெப்போ இன்றி 20 கிராம மக்கள் அவதி ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இரவில் பஸ்கள் நிறுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 29, 2024 07:22 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் அரசு பஸ் டெப்போ வசதி இல்லாததால் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் டவுன் பஸ் வசதியின்றி பயணிகள் தவிக்கின்றனர். தற்காலிகமாக ஒருசில டவுன்பஸ்களை பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி தேவைக்கு ஏற்பட இயக்க வலியுறுத்தி உள்ளனர்.
தேனி, பெரியகுளம், போடி, வத்தலகுண்டு, உசிலம்பட்டி டெப்போக்களிலிருந்து ஆண்டிபட்டியை மையமாக வைத்து 30க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
விவசாயம் அதனை சார்ந்த தொழில்களுக்காக 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் அன்றாடம் ஆண்டிபட்டி வந்து செல்கின்றனர். அதிகாலை 5:30 மணிக்கு முன்பும் இரவு 10:00 மணிக்கு பின்பும் ஆண்டிப்பட்டியில் டவுன் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, அழகாபுரி, சித்தார்பட்டி, ராஜதானி, கதிர்நரசிங்கபுரம், கன்னியப்பபிள்ளைபட்டி, பிச்சம்பட்டி, ஏத்தக்கோயில், மறவபட்டி, க.விலக்கு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தொழில் வியாபாரம் தொடர்பாக ஆண்டிபட்டி நகர் பகுதியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
அன்றாட பணிகளை முடித்து இரவு 10:00 மணிக்கு பின் சொந்த கிராமத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர். காலை 6:00 மணிக்கு முன்பு ஆண்டிபட்டி வருவதற்கு சிரமம் உள்ளது. இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் பஸ்கள் இல்லாததால் ஏற்படும் சிரமங்கள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
இரவில் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தலாம்
விஜயகுமார், போடிதாசன்பட்டி: ஆண்டிபட்டியில் விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம். கிராம பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் காலையில் பெரியகுளம், அல்லது தேனி டெப்போக்களில் இருந்துதான் வரவேண்டும். இரவு 9:00 மணிக்கு மேல் ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தக்கோயில் செல்ல பஸ் வசதி இல்லாததால் 10 கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்கள் மீண்டும் அதே கிராமங்கள் வழியாக வராமல் மாற்றி இயக்குவதால் சிரமம் ஏற்படுகிறது. பஸ் டெப்போ இருந்தால் பயணிகளின் வசதிக்கேற்ப இரவில் இயக்க முடியும். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பஸ்கள் நிறுத்தமின்றி காலியாகவே உள்ளது. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இரவில் டவுன் பஸ்களை நிறுத்தி வைப்பதால் அதிகாலை 12:00 மணி வரையும், அதிகாலை 5:00 மணியில் இருந்தும் பயன்படுத்த முடியும். 20 கி.மீ.,தூரத்திற்கு அப்பால் உள்ள டெப்போக்களில் இருந்து டவுன் பஸ்கள் வந்து செல்வதால் டீசல் செலவும் விரயம் ஆகிறது.
வியாபாரிகளுக்கு கூடுதல் செலவு
மீனாட்சி சுந்தரம், நகர் நல கமிட்டி தலைவர், ஆண்டிபட்டி: 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் அன்றாடம் தொழில், வேலை நிமித்தமாக ஆண்டிபட்டி வந்து செல்கின்றனர். கிராமங்களில் இருந்து காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றை அதிகாலையில் ஆண்டிபட்டி கொண்டு வந்து விற்பனை முடித்து செல்ல இரவு 10:00 மணிக்கு மேல் ஆகிறது. டவுன் பஸ் வசதி கிடைக்காத தொழிலாளர்கள், வியாபாரிகள் அன்றாடம் குறிப்பிட்ட தொகையை ஆட்டோ கட்டணமாக செலவிடுகின்றனர். பெரியகுளம், தேனி, போடி, வத்தலகுண்டு டெப்போக்களில் இருந்து டவுன் பஸ்கள் காலையில் ஆண்டிபட்டி வருவதால் தாமதம் ஆகிறது. இரவில் 9:00 மணிக்கு அந்தந்த டெப்போக்களுக்கு திரும்பி விடுகின்றன. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்களை இரவில் நிறுத்தி இயக்குவதால் பலருக்கும் சிரமங்கள் குறையும். ஆண்டிபட்டியில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களில் நள்ளிரவு வரையும் அதிகாலை 5:00 மணியில் இருந்தும் பல கிராமங்களுக்கு பயணிக்க முடியும். பஸ் டெப்போ இல்லாத ஆண்டிபட்டியில், பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்களை இரவில் நிறுத்தி இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.