/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்
/
ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்
ADDED : ஜன 22, 2024 05:50 AM
போடி: போடி கொம்புதூக்கி அய்யனார் கோயிலில் இருந்து கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டவை கொம்புதூக்கி மலைக்கிராமம். இப்பகுதியில் 50க்கு மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆயிரத்தி 800 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களில் இலவம், காபி, எலுமிச்சை, தென்னை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கொட்டகுடி பகுதியில் வசிக்கும் மக்களின் குலதெய்வமான கொம்புதூக்கி அய்யனார் கோயிலுக்கு வரவும், கண்ணகி கோயிலுக்கு செல்லவும் ரோடு வசதி இல்லாமல் உள்ளது.
இதனால் இப்பகுதியில் விளையும் விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமப்படுகின்றனர். கொட்டக்குடி மக்கள், விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கொம்புதுாக்கி கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.