ADDED : ஜன 14, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் சொசைட்டி தெருவில் வசிப்பவர் மதன்குமார் 32, இவர் டில்லியில் ராணுவ வீரராக உள்ளார். இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சுவாதி என்ற பெண், இவரது வீட்டில் இருந்து 7 பவுன் தங்க நகையை திருடி சென்றார்.
இது தொடர்பாக நந்தினி கொடுத்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் விசாரித்தனர்.
நகையை திருடிய சுவாதியை அவரது கள்ளக்காதலர் அஜய் என்பவருடன் பிடித்து விசாரித்து வருகின்றனர். நகை திருடி, தனது காதலனுடன் வெளியூர் சென்றதாக ஒப்புக் கொண்டார். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.