/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூன் 21, 2025 12:37 AM

தேனி: அல்லிநகரம் வள்ளிநகர் ஆட்டோ டிரைவர் பாண்டிக்குமார் 30. இவரது மனைவி கலையரசி 24. கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு கலையரசியின் 3 வயது பெண் குழந்தையை துாக்கி சென்றார். இதனால் கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத்தர வலியுறுத்தி, அல்லிநகரம் போலீசில் கலையரசி புகார் அளித்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கலையரசி ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு தாய், தந்தையுடன் வந்தார். கலெக்டர் கார் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
அங்கிருந்த போலீசார் கலையரசியை காப்பாற்றி ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பினர்.தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.