/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : செப் 20, 2025 04:43 AM

தேனி: இறந்த கணவரின் 2வது மனைவி சொத்தை பிரித்து தராமல் மிரட்டுவதாக கூறி தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகேஷ்வரி தன்மீதும், மகள்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
அல்லிநகரம் குறிஞ்சி நகர் மகேஸ்வரி 45. இவரது கணவர் பாலமுருகன் 49, கேரளா மூணாறு அருகே பூப்பாறைபகுதியில் சர்வேயராக பணிபுரிந்தார்.
இத்தம்பதிக்கு 22 மற்றும் 14 வயதில் மகள்கள் உள்ளனர். 2011ல் பாலமுருகன் திருச்சி சசிகலாவை 2வது திருமணம் செய்தார். சமீபத்தில் பாலமுருகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதன் பின்மகேஷ்வரி முதல்தாரமான தனக்கும், தனது மகள்களுக்கும் சேர வேண்டிய சொத்தை பதிவு செய்து தராமல் கணவரின் 2வது மனைவி மிரட்டுகிறார்.
சொத்தை பிரித்து வாங்கித்தர கோரி தான் கொண்டு வந்த கேனில் வைத்திருந்த பெட்ரோலை மூவரின் உடலிலும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தனர்.
அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் மூவரையும் காப்பாற்றி, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.