/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் அலைபேசி பிரச்னை பெண் தற்கொலை
/
போடியில் அலைபேசி பிரச்னை பெண் தற்கொலை
ADDED : செப் 29, 2024 07:43 AM
போடி : போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் தெருவை சேர்ந்தவர் பாண்டி 32. இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா 28. இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது.
இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாண்டி தனது மனைவி, தந்தை, தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். சங்கீதா அடிக்கடி அலை பேசியை பார்த்து கொண்டு குழந்தைகளை கவனிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் பாண்டி மூன்று நாட்களாக மனைவியிடம் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா கணவரை சாப்பிட அழைத்துள்ளார். அவர்,' அலை பேசியை பார்த்தபடி இரு. எனக்கு சாப்பாடு வேண்டாம்,' என கோபமாக கூறி உள்ளார். இதனால் மனம் உடைந்த சங்கீதா வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாண்டி புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.