ADDED : அக் 07, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆண்டிபட்டி எரதிமக்காள்பட்டி கருப்பாயி 35. இவரது மகள் காளிஸ்வரி 17. இவர் தேனி புது பஸ் ஸ்டாண்ட் மேற்கு நுழைவாயில் பகுதியில் உறவினர் காளிமுத்து, அவரது தாய் பாலநாகம்மாளிடம் பேசிக் கொண்டிருந்தார். பின் அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது மதுரையில் இருந்து கம்பம் செல்வதற்காக தேனி பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்த டி.என்.57 என் 2334 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ், காளிஸ்வரி மீது மோதியது.
நிலைகுலைந்த காளிஸ்வரி கிழே விழுந்த போது பஸ்சின் பின் சக்கரம், தலையில் ஏறியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடலை மீட்டு போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் கருப்பாயி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.