ADDED : அக் 13, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே சிலமலை நடுத்தெருவை சேர்ந்தவர் வேலுத்தாய் 70. இவர் நேற்று முன்தினம் சிலமலை மெயின் ரோட்டில் நின்றிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த பிக்கப் வேன் வேலுத்தாய் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேலுத்தாய் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
போடி தாலுாகா போலீசார் போடி குப்பிநாயக்கன்பட்டி போடிமெட்டு பாதையில் வசிக்கும் டிரைவர் பெரியகருப்பன் 38. என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்