/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.1 லட்சம் கடன் வாங்க 7.45 லட்சம் இழந்த பெண்
/
ரூ.1 லட்சம் கடன் வாங்க 7.45 லட்சம் இழந்த பெண்
ADDED : ஜூலை 28, 2025 03:14 AM
தேனி: பெண்ணிடம், 1 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக கூறி, 7.45 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாந்தி, 51. இவரது மொபைல் போனுக்கு சில மாதங்களுக்கு முன் ஒருவர் கடன் வழங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். அப்போது, 1 லட்சம் ரூபாய் உடனடியாக கடன் வழங்குவதாக தெரிவித்தார். கடன் தொகை பெற, 'கட்டணம் செலுத்த வேண்டும்' என்றார்.
அவ்வாறு வழங்கும் தொகையை, கடனுடன் சேர்த்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதை நம்பிய சாந்தி, 15 வங்கி கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளாக, 7.45 லட்சம் ரூபாய் வரை பணத்தை அந்நபருக்கு வழங்கினார். ஆனாலும், எந்த தொகையும் அவருக்கு திரும்ப கிடைக்காததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த சாந்தி, போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி பேர்வழியை தேடி வருகின்றனர்.