/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிட்பண்ட் நிறுவன ஷட்டரை திறந்து பணம் திருடிய பெண்
/
சிட்பண்ட் நிறுவன ஷட்டரை திறந்து பணம் திருடிய பெண்
ADDED : மே 22, 2025 04:40 AM
தேனி:தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் ரோட்டில் சிட்பண்ட் நிறுவனம் உள்ளது.
இதன் மேலாளர் அய்யப்பன் 42. கடந்த மே 19ல் பணிக்கு மேலாளர் வந்தபோது, அருகில் உள்ள கடை காவலாளி பெரியகருப்பன், காலை 6:30 மணிக்கு பெண் ஒருவர், கடையை திறந்து உள்ளே சென்று, மீண்டும் வெளியே சென்றவர், கடையை பூட்டாமல் சென்றார்.
எதற்காக கடையை பூட்டாமல் செல்கிறீர்கள் என கேட்டதற்கு, இக் கடையில் தான் நான் வேலை பார்க்கிறேன் எனக்கூறிய பெண், கடையை பூட்டிவிட்டு சென்றார் என காவலாளி தெரிவித்துள்ளார். உடனடியாக மேலாளர் நிறுவனத்தில் உள்ளே சென்று சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பீரோவை திறந்து உள்ளே இருந்த ரூ.61,226 பணத்தை திருடி சென்றது தெரிந்தது.
மேலாளர் தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வீடியோ பதிவு மூலம் பணம் திருடிய பெண் குறித்து விசாரிக்கின்றனர்.