/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலரை எட்டி உதைத்து பெண்ணிடம் தங்க நகை வழிப்பறி
/
டூவீலரை எட்டி உதைத்து பெண்ணிடம் தங்க நகை வழிப்பறி
ADDED : ஜூன் 03, 2025 12:50 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டூவீலரில் பின்னால் உட்கார்ந்து சென்ற பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தங்கச்செயினை வழிப்பறி செய்த நபர், பின் தொடராமல் இருக்க டூவீலரை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.
பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட் தெரு சண்முகம் 65. இவரது மனைவி காமுத்தாய் 60.
இருவரும் டூவீலரில் ஆண்டிபட்டி தாலுகா டி.சுப்புலாபுரத்தில் உறவினரை பார்த்துவிட்டு, அணைக்காரபட்டி குள்ளப்புரம் ரோடு வழியாக பெரியகுளம் வந்து கொண்டிருந்தனர்.
டூவீலரை சண்முகம் ஓட்டினார். சண்முகம் டூவீலரை பின்தொடர்ந்த மர்மநபர் காமுத்தாய் கழுத்தில் அணிந்திருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான நான்கரை பவுன் தங்கச்செயினை வழிப்பறி செய்தும், சண்முகம் டூவீலரில் தன்னை பின்தொடராமல் இருக்க, அவரது டூவீலரை எட்டி உதைத்துவிட்டு சென்றார்.
கீழே விழுந்த கணவன், மனைவி இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெயமங்கலம் போலீசார் வழிப்பறி செய்து டூவீலரில் தப்பிய நபரை தேடி வருகின்றனர்.