/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மறுமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை மோசடி
/
மறுமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை மோசடி
ADDED : பிப் 04, 2025 05:38 AM
தேனி: கணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் மறுமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இரண்டரை பவுன் தங்க நகையைவாங்கி ஏமாற்றி, மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி விசுவாசபுரம் வடக்குத்தெரு ராஜன் மனைவி கற்பகவள்ளி 34. கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
தேனி - மதுரை ரோடு சிப்காட் அருகே உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார்.
ஜன. 1ல் இரவில் வீட்டிற்கு செல்ல போடிவிலக்கில் கற்பகவள்ளிக்கு பழக்கமான ராகுல்என்பவர், வீட்டில் இறக்கிவிட டூவீலரில் ஏற்றிச் சென்றார். மறுமணம் செய்து கொள்வதாககற்பக வள்ளியிடம் ஆசை வார்த்தை கூறினார்.
பின் கற்பகவள்ளி கழுத்தில் அணிந்திருந்தஇரண்டரை பவுன் மதிப்புள்ள தாலி, தங்கச்செயின் உள்ளிட்ட நகைகளை வாங்கிக் கொண்டு,புதிதாக வேறு நகை தருவதாக கூறினார்.
ஆனால் நகை வாங்கித்தராமல் ஏமாற்றினார்.கற்பகவள்ளி புகாரில், வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.