ADDED : அக் 19, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்லத்தாய் 43, இவரது மகன் மூர்த்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தங்கி மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் பிரியதர்ஷினி 22, தனது இரண்டு வயது ஆண் குழந்தையுடன் செல்லத்தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
இரு நாட்களுக்கு முன் பிரியதர்ஷினி தனது குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம், மானூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.
தற்போது வரை அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று சேரவில்லை. உறவினரிடம் விசாரித்தும் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து செல்லத்தாய் புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.