/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணின் உடல் இறந்த நிலையில் கிணற்றிலிருந்து மீட்பு
/
பெண்ணின் உடல் இறந்த நிலையில் கிணற்றிலிருந்து மீட்பு
பெண்ணின் உடல் இறந்த நிலையில் கிணற்றிலிருந்து மீட்பு
பெண்ணின் உடல் இறந்த நிலையில் கிணற்றிலிருந்து மீட்பு
ADDED : மார் 31, 2025 07:06 AM
தேனி : தேனி அல்லிநகரத்தில் காணாமல் போன பெண்ணின் உடல், பூதிப்புரம் அருகே உள்ள கிணற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டு, பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி அல்லிநகரம் தென்றல் நகர் சுரேஷ்குமார். இவரது மனைவி கவிதா 24. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட பிரச்னையில் கவிதா வீட்டில் இருந்து மார்ச் 25ல் வெளியேறினார். இவரது தந்தை வீரபாண்டியை சேர்ந்த சின்னமுருகன் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் மார்ச் 29ல் காணாமல் போன கவிதாவின் உடல் பூதிப்புரம் சுடுகாடு அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மிதந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மகள் கவிதா இறப்பு தொடர்பாக அவரது தந்தை சின்னமுருகன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.