ADDED : நவ 02, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் சுடுகாடு அருகே வராகநதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நேற்று காலை 9:00 மணிக்கு மிதந்து வந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜெயமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் சம்பவ இடத்தை பார்வையிட்டார். துாய்மைப் பணியாளர்கள் உடலை மீட்டனர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்து மூன்று நாட்கள் ஆனதாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டு வராகநதியில் வீசப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.