ADDED : செப் 17, 2025 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிப்பட்டி அருகே ராமச்சந்திராபுரம் காலனியைச் சேர்ந்தவர் சரசு 33, இவரது சகோதரி சித்ரா 27, என்பவருக்கும் கம்பம் மெட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்னையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ரா காணாமல் போனார். கண்டுபிடித்து வந்தபின் சரசு வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன் தினம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்ற சித்ரா திரும்ப வரவில்லை. சரசு புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.