ADDED : ஏப் 09, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் மனைவி பூமாதேவி 33. கணவரின் சொந்த ஊரான ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார். மாலையில் அங்கு சுப்புகாலனியில் உள்ள வீட்டின் அருகே மகனுடன் நடந்து சென்றார்.
டூவீலரில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்த நபர், பூமாதேவி அணிந்திருந்த நான்கரை பவுன் தாலிச் செயின் மற்றும் ஒரு பவுன் செயினை பறித்த நிலையில் பின்னர் இருவரும் தப்பினர். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சம். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

